Sunday, August 05, 2007

My poem to rama on his birthday

நான்கு ஆண்டுகளாக
நான்காவது benchல்
நான்கு பேருடன் இணைந்து
நான்கு faculty
நான்கு விதமாக பேசும்படி நடக்கும்
நான்காம் தேதியில் பிறந்தவனே!

பணம் வலைப்பதிவு மூலம்
இப்போது உனை வந்தடையும் காலம்
passwordல் நீ செய்த ஜாலம்
venkatஐ இடச்செய்தது ஓலம்.

அஷ்டலட்சுமிகளை நீ தேட
தனலட்சுமியோ இப்போது உன் கூட
ஆனாலும் நீ வாட, அதை நீக்க
ஜெயலட்சுமி வருவாள் வெற்றிமாலை சூட!

நான்கு,ஐந்து, ஆறென பெருகியது நம் கூட்டம்
நான்கு ஆண்டுகளும் வெளி கல்லூரிகளிலே நம் நாட்டம்!
கல்லூரியில் வாங்கிக்கொண்டு ஓட்டம்
ஆனாலும் தீரவில்லை மனதில் ஒரு வாட்டம்!

அதை போக்க வந்ததொரு தருணம்
நம் வடதிசை உல்லாச பயணம்!
அந்த 10 நாட்களின் காலம்- அதில்
பலப்படுத்தப்பட்டது நம் நட்பின் பாலம்!

புதியதொரு கூட்டணி-அதனால்
பெரிதடைந்தது நம் அணி!
நம் அணியிலும் பெண்மணிகள்,
ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்த கண்மணிகள்!

செய்யுளாக எழுதிய நான்
உரைநடைக்கு மாறிக் கொள்கிறேன்.
உண்மைகளை உரைக்க
உதவியாக இருக்குமென்று!

ஊருடன் ஒத்து வாழ வேண்டுமாம்
ஊர் ஒத்துக் கொண்டதில்லை!
உண்மையை பாராட்டியதில்லை
உற்சாகப் படுத்தியதில்லை
உட்காயம் மட்டுமே ஏற்படுத்தியது!

புது இலைகள் முளைத்தால்
மரம் வேரை மறந்துவிடுமா?
மறந்துவிடும் என்கின்றனர்-நட்பு
மறத்துப்போன மக்கள்!

மற்றவர் பேசட்டும், ஏசட்டும்.
பேசுவோர்க்கும் ஏசுவோர்க்கும்
பேச்சடைக்கும் ஏட்டுச்சுவடியாய்
நம் நட்பு அமையட்டும்!

எனக்கு ஆரூடம் தெரியாது ,ஆனால் இருப்பது
இன்னும் ஒரு வருடமென தெரியும்.
கண்ணீரோடு பிரிவோம், கண்களில் நினைவு கொள்வோம்
இது போன்ற பேச்சுக்களை பொசுக்குவோம்!

இந்த வருடத்தின் ஒவ்வொரு வினாடியும்
கடவுள் நமக்களித்த வரப்பிரசாதம்!

கடைசி வருடத்தில்தான் சேர்ந்தோமென எண்ணாமல்
கடைசி வரை இணைந்தேயிருக்க எண்ணுவோம்!
கடற்கரையில் ஓயாத அலை போல- கைகளை
கட்டிப்பிடித்துக்கொண்டு ஓடுவோம்!

M.G.Rன் கல்லறையில் காது வைக்கிறார்கள்
அவர் கடிகாரம் இன்னமும் துடிக்கின்றதாம்!
எங்கள் கல்லறையில் காது வைத்துக்கேட்டால்
அனைத்து நண்பர்களின் பெயர்களும் எதிரொலிக்கும்!

எல்லோர்க்கும் கவிதை எழுதியது என் கைகள்
உன் கவிதையை எழுதியதோ என் மன்ம்
அதனால்தான் என்னவோ நிறைய எழுதிவிட்டேன்!
உனக்காக எழுத வேண்டிய கவிதையில்
அனைத்தையும் கூறிவிட்டேன்!
என்ன செய்வது?
உண்மையான நட்பைப்பற்றி
உன் பிறந்தநாளில் சொல்வது சரியென்று கூறிவிட்டேன்!
அளவுக்கு அதிகமாகயிருந்தால் மன்னித்துவிடு!
அகத்திற்கு அருகிலிருந்தால் எனை அணைத்துக்கொண்டுவிடு!

நண்பா நீ வாழ்க!
நம் அனைவரின் நட்பும் நீங்காமல் வாழ்க!

Labels: , ,

10 Comments:

Blogger Raja Krishnan said...

nalla kavidhai.. You better make a kavidhai thoguppu.... I will buy it for sure......

5:08 PM  
Blogger Santhosh kumar.S said...

அருமை நண்பா....ராமாவுக்கு இது ஒரு மறக்க முடியாத பரிசாக அமையும்...

6:13 PM  
Blogger Mahesh said...

@ rajkingme

thangs da...will put when i get kavidhais so that it comes for a book.

@ sano

கண்டிப்பாக! நம்மால் முடிந்த ஏதோ ஒரு சிறிய நினைவலைகளை நினைவூட்டகூடிய ஒரு முயற்சி!

10:34 PM  
Blogger Mahesh said...

@ vasupredha

Thanks for the comments...keep visitin...

10:34 PM  
Blogger Prasi said...

the poem was super da...
couldnt help tears rolling down my eyes after reading it...
no words to describe the thoughts that are in my mind now...when emotions take over...words take a beating...thats what is actually happpening!!!
great work da...

10:24 PM  
Blogger Mahesh said...

@ prasidhha

Sorry for making you to cry but as you said there is a nice feeling to cry in such situations...will write all of mine

2:26 PM  
Blogger manipayal said...

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா பாடலின் ராகம் தேடப்போய், உங்கள் வலையில் வந்து விழுந்தேன். அதனால் நட்பு பற்றிய கவிதை படித்தேன். அருமை. நானும் சென்னைவாசி. ஆனால் இப்பொது வசிப்பதோ சவுதி அரேபியா. என் வலைக்கு வந்து என் கவிதைகளையும் மற்ற போஸ்ட்களையும் படித்து விமர்சனக்களை அள்ளி வீசுங்கள்,மகேஷ்

5:39 PM  
Blogger Pras said...

yappa assisstant directors.. idhu maari ezhudha kathukanga pa.. :D

8:15 AM  
Blogger Sathish said...

very nice to read abt ur friendship

9:42 PM  
Blogger Sathish said...

This comment has been removed by the author.

9:43 PM  

Post a Comment

<< Home