Sunday, August 05, 2007

My poem to rama on his birthday

நான்கு ஆண்டுகளாக
நான்காவது benchல்
நான்கு பேருடன் இணைந்து
நான்கு faculty
நான்கு விதமாக பேசும்படி நடக்கும்
நான்காம் தேதியில் பிறந்தவனே!

பணம் வலைப்பதிவு மூலம்
இப்போது உனை வந்தடையும் காலம்
passwordல் நீ செய்த ஜாலம்
venkatஐ இடச்செய்தது ஓலம்.

அஷ்டலட்சுமிகளை நீ தேட
தனலட்சுமியோ இப்போது உன் கூட
ஆனாலும் நீ வாட, அதை நீக்க
ஜெயலட்சுமி வருவாள் வெற்றிமாலை சூட!

நான்கு,ஐந்து, ஆறென பெருகியது நம் கூட்டம்
நான்கு ஆண்டுகளும் வெளி கல்லூரிகளிலே நம் நாட்டம்!
கல்லூரியில் வாங்கிக்கொண்டு ஓட்டம்
ஆனாலும் தீரவில்லை மனதில் ஒரு வாட்டம்!

அதை போக்க வந்ததொரு தருணம்
நம் வடதிசை உல்லாச பயணம்!
அந்த 10 நாட்களின் காலம்- அதில்
பலப்படுத்தப்பட்டது நம் நட்பின் பாலம்!

புதியதொரு கூட்டணி-அதனால்
பெரிதடைந்தது நம் அணி!
நம் அணியிலும் பெண்மணிகள்,
ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்த கண்மணிகள்!

செய்யுளாக எழுதிய நான்
உரைநடைக்கு மாறிக் கொள்கிறேன்.
உண்மைகளை உரைக்க
உதவியாக இருக்குமென்று!

ஊருடன் ஒத்து வாழ வேண்டுமாம்
ஊர் ஒத்துக் கொண்டதில்லை!
உண்மையை பாராட்டியதில்லை
உற்சாகப் படுத்தியதில்லை
உட்காயம் மட்டுமே ஏற்படுத்தியது!

புது இலைகள் முளைத்தால்
மரம் வேரை மறந்துவிடுமா?
மறந்துவிடும் என்கின்றனர்-நட்பு
மறத்துப்போன மக்கள்!

மற்றவர் பேசட்டும், ஏசட்டும்.
பேசுவோர்க்கும் ஏசுவோர்க்கும்
பேச்சடைக்கும் ஏட்டுச்சுவடியாய்
நம் நட்பு அமையட்டும்!

எனக்கு ஆரூடம் தெரியாது ,ஆனால் இருப்பது
இன்னும் ஒரு வருடமென தெரியும்.
கண்ணீரோடு பிரிவோம், கண்களில் நினைவு கொள்வோம்
இது போன்ற பேச்சுக்களை பொசுக்குவோம்!

இந்த வருடத்தின் ஒவ்வொரு வினாடியும்
கடவுள் நமக்களித்த வரப்பிரசாதம்!

கடைசி வருடத்தில்தான் சேர்ந்தோமென எண்ணாமல்
கடைசி வரை இணைந்தேயிருக்க எண்ணுவோம்!
கடற்கரையில் ஓயாத அலை போல- கைகளை
கட்டிப்பிடித்துக்கொண்டு ஓடுவோம்!

M.G.Rன் கல்லறையில் காது வைக்கிறார்கள்
அவர் கடிகாரம் இன்னமும் துடிக்கின்றதாம்!
எங்கள் கல்லறையில் காது வைத்துக்கேட்டால்
அனைத்து நண்பர்களின் பெயர்களும் எதிரொலிக்கும்!

எல்லோர்க்கும் கவிதை எழுதியது என் கைகள்
உன் கவிதையை எழுதியதோ என் மன்ம்
அதனால்தான் என்னவோ நிறைய எழுதிவிட்டேன்!
உனக்காக எழுத வேண்டிய கவிதையில்
அனைத்தையும் கூறிவிட்டேன்!
என்ன செய்வது?
உண்மையான நட்பைப்பற்றி
உன் பிறந்தநாளில் சொல்வது சரியென்று கூறிவிட்டேன்!
அளவுக்கு அதிகமாகயிருந்தால் மன்னித்துவிடு!
அகத்திற்கு அருகிலிருந்தால் எனை அணைத்துக்கொண்டுவிடு!

நண்பா நீ வாழ்க!
நம் அனைவரின் நட்பும் நீங்காமல் வாழ்க!

Labels: , ,

Sunday, May 06, 2007

நட்பு



காட்டுப்பாதையிலே...
கால்களை காக்க-மாய்ந்த மாட்டுத்
தோலில் செய்த செருப்பு.
வாழ்கைப் பாதையிலே...
வானை நான் பிடிக்க-இறவாமல்
உதவுவதே நட்பு!

"நட்பை செருப்புடன் ஒப்பிடுதல்....
தகுமா...?",என்றால் தகும்!

தான் தேய்ந்தாலும் கொண்டோரின்
பாதங்களை பாதுகைகள் காக்கும்.
அதுபோல நட்பும் தன்னை உண்மையாக
கொண்டோருக்காக
உயிரையும் உதிரமாக்கி உழைக்கும்!
-மகேஷ்

அடுத்து நான் ரசித்த ஒரு கவிதை :

சுடும் வரைதான் நெருப்பு!
சுற்றும் வரைதான் பூமி!
போராடும் வரைதான் மனிதன்.....நீ மனிதன்!!
-பாலகுமாரன

மெட்ராஸ் அய்......

பார்த்த முதல் நாளே...உன் கண்ணை

பார்த்த முதல் நாளே...

கண்கள் உறுத்துதே....எந்தன்

கண்கள் உறுத்துதே!!



உன் விழியில் வழிந்த

same liquid...

என் கண்களிலும் வழிகின்றதே....

உன் bedல நானும் ...புரண்ட பின்

புரண்ட பின்

"Madras ஐ" ஒட்டிகிச்செ!!



காலை எழுந்ததும் என் கண்கள் இரண்டும்

ஒட்டி கொள்வது....கொடுமையே...

தண்ணிய ஊத்தி கழுவுன அப்பாலையும்

திறக்க முடியாதது.....நோவுதே!!



கண் திறந்து கிடக்க முடியாமல் நானும்..

தவிக்கின்ற நாட்கள் இது தான்!!



கண் கொட்ட கொட்டனு வீங்கி கிடக்கிற..

கலீஜான நாட்களும் இது தான்!!



if font not working:
# Start your web browser (say Internet Explorer)
# Click on 'Tools->Options'.
# Click on 'Fonts' button.
# Choose 'Tamil' from the 'Language Script' listbox
# Click OK.

Labels: