Sunday, May 06, 2007

நட்பு



காட்டுப்பாதையிலே...
கால்களை காக்க-மாய்ந்த மாட்டுத்
தோலில் செய்த செருப்பு.
வாழ்கைப் பாதையிலே...
வானை நான் பிடிக்க-இறவாமல்
உதவுவதே நட்பு!

"நட்பை செருப்புடன் ஒப்பிடுதல்....
தகுமா...?",என்றால் தகும்!

தான் தேய்ந்தாலும் கொண்டோரின்
பாதங்களை பாதுகைகள் காக்கும்.
அதுபோல நட்பும் தன்னை உண்மையாக
கொண்டோருக்காக
உயிரையும் உதிரமாக்கி உழைக்கும்!
-மகேஷ்

அடுத்து நான் ரசித்த ஒரு கவிதை :

சுடும் வரைதான் நெருப்பு!
சுற்றும் வரைதான் பூமி!
போராடும் வரைதான் மனிதன்.....நீ மனிதன்!!
-பாலகுமாரன

மெட்ராஸ் அய்......

பார்த்த முதல் நாளே...உன் கண்ணை

பார்த்த முதல் நாளே...

கண்கள் உறுத்துதே....எந்தன்

கண்கள் உறுத்துதே!!



உன் விழியில் வழிந்த

same liquid...

என் கண்களிலும் வழிகின்றதே....

உன் bedல நானும் ...புரண்ட பின்

புரண்ட பின்

"Madras ஐ" ஒட்டிகிச்செ!!



காலை எழுந்ததும் என் கண்கள் இரண்டும்

ஒட்டி கொள்வது....கொடுமையே...

தண்ணிய ஊத்தி கழுவுன அப்பாலையும்

திறக்க முடியாதது.....நோவுதே!!



கண் திறந்து கிடக்க முடியாமல் நானும்..

தவிக்கின்ற நாட்கள் இது தான்!!



கண் கொட்ட கொட்டனு வீங்கி கிடக்கிற..

கலீஜான நாட்களும் இது தான்!!



if font not working:
# Start your web browser (say Internet Explorer)
# Click on 'Tools->Options'.
# Click on 'Fonts' button.
# Choose 'Tamil' from the 'Language Script' listbox
# Click OK.

Labels: